Enable Javscript for better performance
37 அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் 37 அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
     இதுகுறித்து தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
      தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தலைமை அஞ்சலகங்கள் உள்ளிட்ட 37 அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.  புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தலுக்கு இலவசம்.
     ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்லிடைப்பேசி எண் திருத்தம் செய்ய ரூ. 30 கட்டணம் ஆகும். பயோமெட்ரிக் திருத்தம் செய்யவும் ரூ. 30 கட்டணம் வசூல் செய்யப்படும். ஆதார் அட்டை வண்ணத்தில் அச்சிட ரூ. 24,  ஆதார் அட்டை கருப்பு வெள்ளையில் அச்சிட ரூ. 12  வசூலிக்கப்படும்.
     இதுதவிர, வெளிநாட்டு அஞ்சல் சேவையும் குறைந்த கட்டணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால்,  மக்கள் அனைவரும் அஞ்சல் துறையின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளவும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai