திருச்செந்தூரில் 12 கால் மண்டபத்தின் மேற்கூரை இடிந்தது: பக்தர்கள் தப்பினர் 

திருச்செந்தூர் சன்னதித் தெருவில் பழைமை வாய்ந்த 12 கால் மண்டபத்தின் மேற்கூரை புதன்கிழமை திடீரென

திருச்செந்தூர் சன்னதித் தெருவில் பழைமை வாய்ந்த 12 கால் மண்டபத்தின் மேற்கூரை புதன்கிழமை திடீரென இடிந்து விழுந்தது . அப்போது யாரும் அந்த வழியாக வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் வசதிக்காக சன்னதித் தெருவில் இருபக்க தூண்கள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையால் நிழல்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தெருவில் உள்ள அகஸ்தியர் கோயில் அருகில் பழைமையான செங்குந்தர் 12 கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் பலமிழந்து காணப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களாக அப்பகுதியில் பெய்த மழையால் மண்டபத்தின் மேற்கூரை ஈரப்பதம் தாங்காமல் புதன்கிழமை இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் பக்தர்கள் யாரும் அவ்வழியாக வராததால் விபரீதம் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் யாரும் செல்லாதவாறு கயிறு கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதால், மண்டபம் மேலும் இடிந்து விழுவதற்குள் உரிய  நடவடிக்கை எடுக்க  அதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com