குலசேகரன்பட்டினம் உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு

உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதி உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள்   வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதி உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள்   வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
     குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக்.10 ஆம் தேதி தொடங்கி அக்.20 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.  இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.இதையொட்டி, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக உணவகங்கள்,தெருவோர கடைகள்,தேனீர் உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கடைகளில் சுகாதாரம், தரம் எவ்வாறு உள்ளது என்பதை அறிய உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் அமுதா உத்தரவின்பேரிலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் ஆலோசனைப்படி, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மகராஜன்(உடன்குடி,சாத்தான்குளம்)குமாரபாண்டியன்(ஆழ்வார்திருநகரி)ஆகியோர் ஆய்வை மேற்கொண்டனர்.
சுகாதாரமான முறையில் உணவுப் பொருள்களை மூடி வைத்து விற்குமாறு வியாபாரிகளி டம் அதிகாரிகள் வலியுறுத்தினர். மேலும், உணவுப் பொருள்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்த விழிப்புணர்வுத் துண்டுப்  பிரசுரங்களை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com