தமிழக அரசுக்கு மத்திய அரசு எவ்வித அழுத்தமும் தரவில்லை

மத்திய பா.ஜ.க. அரசு, தமிழக அரசுக்கு எந்தவிதமான அழுத்தத்தையும் இதுவரை கொடுத்தது இல்லை என்றார் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

மத்திய பா.ஜ.க. அரசு, தமிழக அரசுக்கு எந்தவிதமான அழுத்தத்தையும் இதுவரை கொடுத்தது இல்லை என்றார் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்காதது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளது குறித்து கேட்கிறீர்கள். பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்காதது நீதிமன்றத்தின் முடிவு. ஒருவருக்கு அரசோ, காவல் துறையோ ஜாமீன் வழங்கமுடியாது.
எந்த காரணத்திற்காகவும் பாரதிய ஜனதா கட்சியோ, மத்திய அரசோ, தமிழக அரசுக்கு எந்தவிதமான அழுத்தத்தையும் கொடுத்ததில்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இயக்கங்கள் தடையாக இருந்து வருகின்றன என்றார் அவர்.
பா.ஜ.க. மாவட்டச் செயலர் இரா. சிவமுருகன் ஆதித்தன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆர்.டி. செந்தில்வேல், மாவட்ட மகளிரணி பொதுச் செயலர் கு. நெல்லையம்மாள், நகரத் தலைவர் எஸ். சரவணன், நகரப் பொதுச் செயலர் சந்தானம், நகர துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com