தூத்துக்குடியில் ஆளுநரிடம் 357 மனுக்கள் அளிப்பு

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் 357 மனுக்கள் அளிக்கப்பட்டன.

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் 357 மனுக்கள் அளிக்கப்பட்டன.
ஆளுநரின் ஆய்வின்போது,  மக்கள் பிரதிநிதிகள், வர்த்தக அமைப்புகள் மற்றும் பொதுக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது, ஆளுநரிடம் 357 மனுக்கள் அளிக்கப்பட்டன.  நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ. வியனரசு அளித்த மனுவில்,  ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியுள்ள நிலையில் மீண்டும் ஆலையை திறக்கும் முயற்சியில் ஆலை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ஆலையை மீண்டும் திறந்தால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல, ஸ்டெர்லைட் ஆலை ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஆலை ஊழியர்கள் அளித்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தூத்துக்குடியைச் சேர்ந்த கே. ராமச்சந்திரன் அளித்த மனுவில், பொலிவுறு நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ள தூத்துக்குடியில் போல்பேட்டை மந்திரமூர்த்தி விநாயகர் கோயில் அருகே திறந்தவெளி மலம் கழித்தல் பகுதியாக உள்ளது. அந்த இடத்தை தூய்மையாக பராமரிப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், மாநகராட்சி நிர்வாகமும் தெரிவித்துள்ள நிலையில் அந்த இடம் சுகாதாரத்துறையின் பாராமுகமாக உள்ளதால் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு புறம்பாக உள்ள அந்தப்பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வலியுறுத்த வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com