பெரிய வகை சரக்கு கப்பல்களின் வருகையை அதிகரிக்க"தூத்துக்குடி துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணி அக். 18இல் தொடக்கம்'

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பெரிய வகை சரக்கு கப்பல்களின் வருகையை அதிகரிக்கும் வகையில்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பெரிய வகை சரக்கு கப்பல்களின் வருகையை அதிகரிக்கும் வகையில், மிதவை ஆழத்தை அதிகரிக்கும் பணி அக். 18ஆம் தேதி தொடங்க உள்ளது என்றார் துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் நா. வையாபுரி.
இதுகுறித்து, தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தற்போது 310 மீட்டர் நீளம் கொண்ட சரக்குப் பெட்டக கப்பல்களை கையாளுவதற்கு 13.5 மீட்டர் ஆழமும் மற்றும் பொதுசரக்கு கப்பல்களை கையாளுவதற்காக 14 மீட்டர் ஆழமும் உள்ளது.
கடந்த ஆண்டு சரக்குப் பெட்டக போக்குவரத்தை காட்டிலும் நிகழாண்டு சரக்கு பெட்டக போக்குவரத்து அதிகரிப்பதை கருத்தில் கொண்டும் மற்றும் மெயின்லைன் சரக்குபெட்டக கப்பல்கள் வருவதற்கு வசதியாகவும் துறைமுகத்தின் ஆழத்தை 15.50 மீட்டராகவும், துறைமுக கப்பல் நுழைவு வாயிலை 16.50 மீட்டராகவும் ஆழப்படுத்தும் பணி அக். 18ஆம் தேதி தொடங்க உள்ளது. இதன் மூலம் 14.5 மீட்டர் ஆழமுடைய முழு அளவுடன் கூடிய பெரியவகை கப்பல்களை கையாள முடியும்.
இரண்டாவது கட்டமாக 16 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பெரிய கப்பல்கள் மற்றும் பொது சரக்கு கப்பல்கள் வருவதற்கு ஏதுவாக உள்துறைமுகத்தின் ஆழம் 16.70 மீட்டராகவும் மற்றும் துறைமுகத்தின் கப்பல் நுழைவு வாயில் 18 மீட்டராகவும் ஆழப்படுத்தப்பட உள்ளது. மேலும் துறைமுகத்தின் கப்பல் நுழைவு வாயிலை தற்போதுள்ள 153 மீட்டரிலிருந்து 230 மீட்டர் அகலப்படுத்தம் பணி நடைபெற உள்ளது. இந்தத் திட்டம் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிக்கப்படும்.
இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி துறைமுகத்தில் சரக்கு பெட்டகங்கள் கையாளவதற்கான மிதவை ஆழத்தை 11.50 மீட்டரில் இருந்து 13.50 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. கப்பலின் நீளம் 230 மீட்டரில் இருந்து 310 மீட்டராகவும், அகலம் 32.26 மீட்டரில் இருந்து 48 மீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அக். 18ஆம் தேதி தொடங்கப்படும் இந்த தூர்வாரும் பணிகளின் முடிவில், துறைமுகத்தில் ஆழமான கப்பல் தளங்களின் மிதவை ஆழம் 14.50 மீட்டராக இருக்கும் என்றார் அவர். 
தொடர்ந்து, தேசிய சரக்கு பெட்டக நிலையம் சார்பில் நடைபெற்ற சரக்கு பெட்டகம் நவீன பரிமாற்றத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதை கொண்டாடும் விழாவில் கலந்துகொண்டு துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் நா. வையாபுரி பேசினார்.
நிகழ்ச்சியில், சுங்கத்துறை திருச்சி மண்டல முதன்மை ஆணையர் ரஞ்சன் குமார் ரெளத்ரி, தூத்துக்குடி பிரிவு ஆணையர் திவாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com