செட்டிகுளத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
By DIN | Published on : 15th September 2018 09:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சாத்தான்குளம் வட்டார வேளாண்மைத் துறை சார்பில், கூட்டுப் பண்ணையத் திட்டம் தொடர்பான விவசாயிகளுக்கு பயிற்சி செட்டிகுளத்தில் நடைபெற்றது.
வேளாண்மை அலுவலர் சுஜாதா தலைமை வகித்து பேசினார். உதவி வேளாண்மை அலுவலர் சிவராம் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். உதவி வேளாண்மை அலுவலர் கோபாலகிருஷ்ணன் உழவன் செயலி குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். செட்கோ தொண்டு நிறுவன களப் பணியாளர் சரோஜா, விவசாயிகள் ஆர்வலர் குழுக்களின் பேரேடுகள் பராமரிப்பு மற்றும் நிர்வாகிகள் செயல்பாடு குறித்து பேசினார். பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது
வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெபக்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் முருகன் செய்திருந்தார்.