தூத்துக்குடியில் எழுத்தறிவு தினம்

தூத்துக்குடியில் எழுத்தறிவு தின கருத்தரங்கு மற்றும் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.

தூத்துக்குடியில் எழுத்தறிவு தின கருத்தரங்கு மற்றும் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.
தூத்துக்குடி வஉசி துறைமுகப் பொறுப்புக் கழகம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் ஆகியவை சார்பில், உலக எழுத்தறிவு தின கருத்தரங்கு தூத்துக்குடி முத்தரையர்நகரில் உள்ள இலவச மாலை நேர கல்வி மைய அரங்கில் நடைபெற்றது. 
கருத்தரங்குக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் எஸ்.ஜே. கென்னடி தலைமை வகித்தார். கருத்தரங்கை வஉசி துறைமுக பொறுப்புக் கழக சமூக பாதுகாப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி. செலின் தொடங்கிவைத்தார். மேலும், அனைவருக்கும் கல்வி என தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டி மற்றும் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற இலவச மாலைநேர கல்விமைய மாணவ, மாணவிகளுக்கு துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் சமூக பாதுகாப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி. செலின் பரிசுகள் வழங்கினார். 
கருத்தரங்கில், மதர் சமூக சேவை நிறுவன ஆலோசகர் வழக்குரைஞர் சதீஷ்பாலன், புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பா. டொம்னிக் சாவியோ, அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம், புனித அலாய்சிஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சந்தானந்த சீலி உள்ளிட்டோர் 
கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com