தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு சுயம்வரம்

தூத்துக்குடி சில்வர்புரத்தில் உள்ள லூசியா மாற்றுத் திறனாளிகள் இல்லம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான சுயவரம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.


தூத்துக்குடி சில்வர்புரத்தில் உள்ள லூசியா மாற்றுத் திறனாளிகள் இல்லம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான சுயவரம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி, திருநெல்வேலி என மாநிலத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு தங்களின் சுயவிவரங்களை தெரிவித்தனர்.
முதல் கட்டமாக கால் பாதித்த நாடிமுத்து- கற்பகவள்ளி, செவித்திறன் பாதித்த அசோக்-மாலா, பார்வையிழந்த கணேசன்-கலையரசி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அந்த ஜோடிகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
பங்குத்தந்தை லியோ ஜெயசீலன் ஆசி வழங்க, மாவட்ட முதன்மை குரு கிருபாகரன் தலைமையில், லூசியா இல்ல இயக்குநர் கிராசிஸ் மைக்கேல் முன்னிலையில் 3 ஜோடிகளும் மாலை மாற்றி திருமண ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
தொடர்ந்து, தேர்வு செய்யப்படும் ஜோடிகள் தங்கள் உறவினர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சுயம்வரத்தில் தேர்வு செய்யப்படும் ஜோடிகளுக்கு லூசியா இல்லம் சார்பில், டிச. 13ஆம் தேதி இலவசமாக திருமணம் செய்து வைக்கப்படும் என லூசியா இல்ல இயக்குநர் கிராசிஸ் மைக்கேல் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com