கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தத்தில் விளை நிலத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை வருவாய்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட பிள்ளையார்நத்தம் கிராமத்தில் விவசாயிகள் மக்காச்சோளம், சோளம், ஊடுபயிராக பருத்தி ஆகியவை பயிரிட்டிருந்தனர். இதனிடையே, சனிக்கிழமை மாலையில் பிள்ளையார்நத்தத்தில் உள்ள நிலத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாம். கோவில்பட்டி தீயணைப்புபடையினர் வந்து தீயை அணைத்தனர். இதில், பல ஏக்கர் நிலத்தில் விளை பொருள்கள் தீயில் கருகின. தகவலறிந்த கோட்டாட்சியர் விஜயா தலைமையில் வட்டாட்சியர் பரமசிவன், அதிகாரிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வருவாய்த்துறை சார்பில் வட்டாட்சியர் தலைமையில், மீண்டும் ஆய்வில் ஈடுபட்டனர். தீ விபத்தில் பாதிப்பு இல்லை. மக்காச்சோளம் அறுவடை செய்த வயலில் சருகுகள்தான் தீயில் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவின் 107 எம்.எல்.ஏ.க்களும் ராஜிநாமா செய்கிறார்களா?

நாசிக் டிசிஎஸ் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட நிதா கான் கைது!

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 21 மாவட்டங்களில் மழை!

எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது! - ஜோதிமணி
வீடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

