திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பள்ளி மாணவர், மாணவிகளுக்கான திருப்பாவை - திருவெம்பாவை பாடல் போட்டி நடைபெற்றது.
40ஆவது ஆண்டு பாவை விழாவை முன்னிட்டு நடைபெற்ற இப்போட்டியில், திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள 13 பள்ளிகளிலிருந்து 166 மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட இசைப்பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமசெல்வி முன்னிலையில், குலசேகரன்பட்டினம் கவிஞர் முத்தரசு, இல்லங்குடி, திருச்செந்தூர் வேலாண்டி ஓதுவார் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர். நிகழ்ச்சியில், கோயில் முதுநிலை கணக்கு அலுவலர் மதிவாணன், உதவி ஆணையர் செல்வராஜ், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், அன்பு இல்ல காப்பாளர் பாலமுருகன், பிச்சையா, ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா.பாரதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிறந்து 9 நாள்களே ஆன பெண் குழந்தை கடத்தல்: 5 மணி நேரத்தில் மீட்பு; பெண் கைது

பொதுமக்களின் புகாா்களுக்கு உடனுக்குடன் தீா்வு: சென்னை மாநகராட்சி ஆணையா் நேர்காணல்!

தாயுமானவா் திட்டம் மறுசீரமைப்புடன் தொடரும்: அமைச்சா் வி. காந்திராஜ்

நான் மோடியின் மிகப் பெரிய ரசிகன்! அமெரிக்க அதிபா் டிரம்ப்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


