ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

திருச்செந்தூரில் திருப்பாவை - திருவெம்பாவை பாடல் போட்டி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பள்ளி மாணவர், மாணவிகளுக்கான திருப்பாவை - திருவெம்பாவை பாடல் போட்டி நடைபெற்றது.

Updated On :24 ஜனவரி 2019, 1:09 am IST

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பள்ளி மாணவர், மாணவிகளுக்கான திருப்பாவை - திருவெம்பாவை பாடல் போட்டி நடைபெற்றது.
40ஆவது ஆண்டு பாவை விழாவை முன்னிட்டு நடைபெற்ற இப்போட்டியில், திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள 13 பள்ளிகளிலிருந்து 166 மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.  
தூத்துக்குடி மாவட்ட இசைப்பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமசெல்வி முன்னிலையில், குலசேகரன்பட்டினம் கவிஞர் முத்தரசு, இல்லங்குடி, திருச்செந்தூர் வேலாண்டி ஓதுவார் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.  நிகழ்ச்சியில், கோயில் முதுநிலை கணக்கு அலுவலர் மதிவாணன், உதவி ஆணையர் செல்வராஜ், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், அன்பு இல்ல காப்பாளர் பாலமுருகன், பிச்சையா, ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா.பாரதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.