தூத்துக்குடியில் அமமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 01st April 2019 02:15 AM | Last Updated : 01st April 2019 02:15 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ம. புவனேஸ்வரன் மாநகரப் பகுதிகளில் சனிக்கிழமை வாக்குச் சேகரித்தார்.
இத்தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ம. புவனேஸ்வரன், சனிக்கிழமை இரவு தூத்துக்குடி சிவன்கோயில் அருகில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, கீழரதவீதி, கிரேட் காட்டன் சாலை, காசுக்கடை பஜார், காந்தி சிலை, மட்டக்கடை புதுத்தெரு வழியே திரேஸ்புரம் பகுதியில் திறந்த ஜீப்பில் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில், மாவட்டச் செயலர்கள் ஹென்றி தாமஸ் (தெற்கு), எஸ். சுந்தரராஜ் (வடக்கு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரசாரத்தில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தன்னை வெற்றி பெறச் செய்தால் எந்த நேரமும் எளிதாக சந்திக்க முடியும் என்றும், இம்மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என்றும் வேட்பாளர் புவனேஸ்வரன் தெரிவித்தார்.