Enable Javscript for better performance
மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்

    By DIN  |   Published On : 09th April 2019 05:40 AM  |   Last Updated : 09th April 2019 05:40 AM  |  அ+அ அ-  |  

    தமிழகத்தில் மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்றார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் எம்எல்ஏ.
    தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் ம. புவனேஸ்வரனை ஆதரித்து தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே திங்கள்கிழமை இரவு பிரசாரம் செய்த அவர் பேசியது:
    தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தற்போது தேர்தல் வந்துள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணி மதச்சார்பற்ற கூட்டணி எனக் கூறி வருகின்றனர். மதங்களை பற்றி தேவை இல்லாமல் பேசி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதில் பாஜகவுக்கு இணையாக இந்தக் கூட்டணியும் இறங்கிவிட்டது.
    தமிழகத்தில் எட்டுவழிச் சாலை திட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஆனால், சட்டப்பேரவையில் திமுக இந்தத் திட்டத்தை எதிர்க்கவில்லை. தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதால் எதிர்ப்பாக பேசுகின்றனர்.
    தமிழகத்தில் மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அனுமதிக்காது. தூத்துக்குடியில் அமமுக வேட்பாளர் ம. புவனேஸ்வரன் வெற்றி பெற்றால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தாமிர ஆலை கூடாது என்பதே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை என்றார் அவர்.
    திருச்செந்தூர்: திருச்செந்தூரில் டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசியது: நடைபெறுகின்ற சட்டப்பேரவை இடைத்தேர்தல் அதிமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாகும். 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் இந்த ஆட்சி நீடிக்கும் நிலை உள்ளது. ஆனால், தேர்தலில் அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.
    அமுமக வேட்பாளர் வெற்றி பெற்றால்  திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில், பனிமயமாதா ஆலயம், வனத்திருப்பதி போன்ற ஆன்மிக தலங்கள் நிறைந்த இம்மாவட்டத்தை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குலசை, மணப்பாடு, காயல்பட்டினம் கடற்கரை மேம்படுத்தப்படும். சடையனேரி கால்வாயில் நிரந்தரமாக தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். கடம்பாகுளம்  தூர்வாரப்படும். பெரியதாழையில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்றார் அவர்.
    வேட்பாளர் ம.புவனேஸ்வரன், அமைப்புச் செயலர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, தெற்கு மாவட்டச் செயலர் ஹென்றி தாமஸ், மாநில சிறுபான்மை பிரிவுத் தலைவர் எக்ஸ்.லெனின், மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலர் ஆனந்தராஜ்,  மாநில இளைஞர் பாசறை இணைச் செயலர் பி.ஆர்.மனோகரன், ஒன்றியச் செயலர்கள் திருச்செந்தூர் எஸ்.பொன்ராஜ், உடன்குடி அம்மன் டி.நாராயணன், சாத்தான்குளம் திவாகர், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலர் வி.மணிகண்டன், திருச்செந்தூர் நகரச் செயலர் ஜி.முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஆறுமுகனேரி: ஆறுமுகனேரில் அமமுக வேட்பாளரை ஆதரித்து டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். திருச்செந்தூர் ஒன்றியச் செயலர் எஸ்.பொன்ராஜ், நகரச் செயலர் நிவாஸ்கண்ணன், மாவட்ட விவசாய அணி துணைச் செயலர் ஜெயசங்கர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp