சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
By DIN | Published On : 11th April 2019 06:59 AM | Last Updated : 11th April 2019 06:59 AM | அ+அ அ- |

நவகைலாய திருத்தலங்களில் சுக்ர ஸ்தலமான சேர்ந்தபூமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் சமேத சௌந்தர்ய நாயகி அம்பாள் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா புதன்கிழமை (ஏப்.10) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைமுன்னிட்டு அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்துக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், கொடியேற்ற மண்டகப்படிதாரரான ஏரல் அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி கோயில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார், பிரதோஷ கமிட்டி அமைப்பாளர் மருதநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை தேவஸ்தான செயல் அலுவலர் (பொ) கிருஷ்ணமூர்த்தி, கணேச பட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G