கந்தபுரம் ஆலயத்தில் ராம நவமி விழா
By DIN | Published On : 14th April 2019 12:34 AM | Last Updated : 14th April 2019 12:37 AM | அ+அ அ- |

உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலயத்தில் ராம நவமி விழா நடைபெற்றது.
இதையொட்டி சனிக்கிழமை காலை 8 மணிக்கு கணபதி பூஜை, மங்கள ஆரத்தி, அகண்ட நாம சங்கீர்த்தனம், கூட்டுப் பஜனை, பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.
சாத்தான்குளத்தில் இன்று...
சாத்தான்குளத்தில் ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை சார்பில் ராம நவமி மகா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை(ஏப்.14) நடைபெறுகிறது.
சாத்தான்குளம் பிள்ளையார் சன்னதி தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் மாலை 6 மணிக்கு தொடங்கும் இவ்விழாவில், கீர்த்தனை, சமயச் சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து, சிறப்பு உபன்யாசம், பகவத்கீதை, பக்தி சார்ந்த சமய கலந்துரையாடல் நடைபெறுகின்றன. இரவு 8 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஏற்பாடுகளை ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.