சுடச்சுட

    

    திருச்செந்தூரில் அதிமுக, திமுக, அமமுக இறுதிக்கட்ட பிரசாரம்

    By DIN  |   Published on : 17th April 2019 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி பாஜக  வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனை ஆதரித்து திருச்செந்தூரில் இறுதிக் கட்ட  பிரசாரம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
    திருச்செந்தூர் வஉசி திடல் அருகே பிரசாரத்தை நிறைவு செய்தனர். இதில், அதிமுக ஒன்றியச் செயலர் மு. ராமச்சந்திரன், நகரச் செயலர் வி.எம்.மகேந்திரன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் மு.சுரேஷ்பாபு,  கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ப.தா.கோட்டைமணிகண்டன்,  தேமுதிக ஒன்றியச்செயலர் எஸ்.எ.செந்தில்குமார்,  பா.ஜ.க. மாவட்ட தமிழ்வளர்ச்சிப்பிரிவு தலைவர் இரா.கிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பலர் கலந்துகொண்டு இறுதிக்கட்ட பிரசாரம் செய்தனர்.
    திமுக:  நகர் முழுவதும் பிரசாரம் மேற்கொண்ட திமுகவினர்,  பேரூராட்சி  அலுவலகம் எதிரே  பிரசாரத்தை நிறைவு செய்தனர். இதில்,  திமுக மாநில மருத்துவரணி துணை அமைப்பாளர் செ.வெற்றிவேல், ஒன்றியச்செயலர் செங்குழி ரமேஷ்,  நகரச்செயலர் வாள் சுடலை, காங்கிரஸ் மாவட்டச் செயலர்கள் நா.லோகநாதன்,  க.சு.ஜெயந்திநாதன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச்செயலர் க.சு.கல்யாணசுந்தரம்,  விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்டச் செயலர் முரசு தமிழிப்பன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
    அமமுக: திருச்செந்தூரில் பல்வேறு வீதிகள் வழியாக பிரசாரம் மேற்கொண்ட அமமுகவினர்,  வெயிலுகந்தம்மன் கோயில் பகுதியில் தங்கள் பிரசாரத்தை நிறைவு செய்தனர். இதில்,  ஒன்றியச்செயலர் எஸ்.பொன்ராஜ், நகரச்செயலர் ஜி.முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai