சுடச்சுட

  

  தேர்தல் பாதுகாப்புப் பணியில் 4 ஆயிரம் போலீஸார்: எஸ்.பி. தகவல்

  By DIN  |   Published on : 17th April 2019 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 4 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா.
  இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
  தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள 130 வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 200 ஊர்க்காவல் படையினர், 300 முன்னாள் ராணுவத்தினர், 60 ஓய்வு பெற்ற காவல் துறையினர் மற்றும் 30 தீயணைப்புத் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
  மகாராஷ்டிர மாநில சிறப்புக் காவல்படை, ரயில்வே சிறப்புக் காவல் படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை, ஆயுதப்படை மற்றும் மாவட்ட காவல் துறையினர் என ஏறத்தாழ 4000 போலீஸார் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai