சாத்தான்குளம் கருப்பசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்

சாத்தான்குளம் தட்டார் மேலத் தெரு  ஸ்ரீகருப்பசுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை  நடைபெற்றது. 

சாத்தான்குளம் தட்டார் மேலத் தெரு  ஸ்ரீகருப்பசுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை  நடைபெற்றது. 
இக்கோயிலில், அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா   திங்கள்கிழமை ( ஏப். 15) தொடங்கி புதன்கிழமை  (ஏப்.17) வரை 3 நாள்கள் நடைபெற்றது. தொடக்க நாளன்று காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, மகாகணபதி ஹோமம், கோபூஜை, கஜபூஜை தீபாராதனை, மாலை 5 மணிக்கு தீர்த்த சங்கரணம், எஜமான வர்ணம், கும்பஅலங்காரம், இரவு 10 மணிக்கு முதல்கால யாக பூஜை ஆகியவை நடைபெற்றன.
2ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (ஏப். 16) காலை 8 மணிக்கு யாகசாலை பூஜை, வேதிகா அர்ச்சனை, பூர்ணாஹுதி, தீபாராதனை, மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, இரவு 7மணியிலிருந்து 8 மணிக்குள் குரு ஓரையில் யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தனம் ஆகியவை நடைபெற்றன. 3ஆம் நாளான புதன்கிழமை காலை 5 மணிக்கு யாகசாலை பூஜை, நாடிசந்தனம், மகா பூர்ணாஹுதி, யாத்ராதானம், கடம் எழுந்தருளல், காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் மூலஸ்தான மூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு மகேஸ்வர பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பிற்பகல் 12.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com