வாகனங்கள் மோதல்: வியாபாரி சாவு
By DIN | Published On : 21st April 2019 01:26 AM | Last Updated : 21st April 2019 01:26 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே சனிக்கிழமை இரவு பைக் மீது சுமை ஆட்டோ மோதியதில் வியாபாரி உயிரிழந்தார்.
நாசரேத் அருகே உள்ள வில்லம்புதூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (60). ஆட்டு வியாபாரியான இவர், சனிக்கிழமை இரவு 8 மணியளவில் பைக்கில் சாத்தான்குளத்தில் இருந்து பேய்க்குளம் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பேய்க்குளத்தில் இருந்து வசவப்பனேரியைச் சேர்ந்த சண்முகவேல் மகன் பெருமாள் (24) சாத்தான்குளம் நோக்கி ஓட்டிச் சென்ற சுமை ஆட்டோ கருங்கடல் கெபி அருகே பைக் மீது மோதியது. இதில், கிருஷ்ணசாமி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்கள் சாந்தி, சிலுவை அந்தோணி ஆகியோர் அங்குச் சென்று பார்வையிட்டு கிருஷ்ணசாமியின் சடலத்தை சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலம், விபத்து குறித்து வழக்குப் பதிந்து சுமை ஆட்டோ ஓட்டுநர் ச. பெருமாளை கைது செய்தனர்.