விஷம் குடித்த பூசாரி மரணம்
By DIN | Published On : 21st April 2019 01:25 AM | Last Updated : 21st April 2019 01:25 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருகே விஷம் குடித்த பூசாரி சனிக்கிழமை உயிரிழந்தார்.
கோவில்பட்டியையடுத்த வடக்கு செமப்புதூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் சண்முகவேல்(37). டி.சண்முகபுரத்தில் உள்ள கோயிலில் பூசாரியாக இருந்து வந்த இவர், கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம்.
இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி அவர் விஷம் குடித்ததையடுத்து, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப்பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கொப்பம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.