விளையாட்டு பயிற்றுநர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்
By DIN | Published On : 22nd April 2019 09:46 AM | Last Updated : 22nd April 2019 09:46 AM | அ+அ அ- |

துரோணாச்சார்யா மற்றும் ராஷ்டிரிய கேல் புரோட்சாகன் புரஸ்கார் விருது பெற விளையாட்டு பயிற்றுநர்கள், ஊக்கப்படுத்திய நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விளையாட்டில் தலை சிறந்த வீரர், வீராங்கனைகளை உருவாக்கிய விளையாட்டு பயிற்றுநர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான துரோணாச்சார்யா விருதும், விளையாட்டை ஊக்கப்படுத்திய மற்றும் மேம்படுத்திய தனியார் நிறுவனங்கள், பொது நிறுவனங்களுக்கு அல்லது அரசு சாரா அமைப்புகளுக்கு ராஷ்டிரிய கேல் புரோட்சாகன் புரஸ்கார் விருதும் வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுக்கான விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அரங்கம், ஜார்ஜ் சாலை, தூத்துக்குடி என்ற முகவரியில் இயங்கி வரும் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இம்மாதம் 25 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.