திருச்செந்தூர் உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா

திருச்செந்தூர் சைவ வேளாளர் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட  அருள்தரும் உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.


திருச்செந்தூர் சைவ வேளாளர் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட  அருள்தரும் உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.
இதைமுன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு அம்மனுக்கு மாக்காப்பு அலங்கார தீபாராதனையும், திங்கள்கிழமை இரவு சந்தனக்காப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து கும்பம் வீதியுலா, இரவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு, ரத வீதிகள் வழியாக அருள்தரும் முத்தாரம்மனுக்கு கால்நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
தொடர்ந்து உச்சினிமாகாளி அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையாகி, அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புதன்கிழமை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய நிர்வாகிகள் மற்றும் இளைஞர் பேரவையினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com