தூத்துக்குடியில் சகோதரரை சுட்டுக் கொன்றதாக திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கைது

தூத்துக்குடியில் சொத்துத் தகராறில் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது சகோதரரான திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உள்ளிட்ட 5 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.


தூத்துக்குடியில் சொத்துத் தகராறில் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது சகோதரரான திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உள்ளிட்ட 5 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மட்டக்கடை சின்னக்கடை தெருவைச் சேர்ந்த ஜேசு என்பவரது மகன் எஸ்.ஜே. ஜெகன் (49). தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராகவும், விஜய் ரசிகர் மன்ற மாவட்டத் தலைவராகவும் உள்ளார். இவர் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளனவாம்.
இந்நிலையில், ஜெகனின் சகோதரர் சிமன்சன் (32) திங்கள்கிழமை நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக வடபாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், எஸ்.ஜே. ஜெகனை தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். அவர் மீது கொலை,  உரிமம் பெறாத துப்பாக்கி வைத்திருந்ததாக படைக்கலன் ஆயுதப் பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
சிமன்சன் கொலை தொடர்பாக மணிகண்டன், ரங்கநாத கண்ணன், பண்டாரம், முத்துப்பாண்டி ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். 5 பேரையும் தூத்துக்குடி 3ஆவது நீதித் துறை நடுவர் மன்றத்தில் நீதிபதி தமிழ்ச்செல்வி முன் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவர்களை மே 8ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, 5 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com