திறனாய்வுத் தேர்வு: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
By DIN | Published On : 26th April 2019 01:22 AM | Last Updated : 26th April 2019 01:22 AM | அ+அ அ- |

தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர், மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இப்பள்ளியில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வில் 16 மாணவர், மாணவிகள் வெற்றி பெற்றனர்.
இம் மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனி செல்வம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் எம்.செல்வராஜ், செயலர் எஸ்.ஆர்.ஜெயபாலன், பள்ளிச் செயலர் கே.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், நிர்வாகக் குழு உறுப்பினர் மணிக்கொடி, ரோட்டரி சங்க உறுப்பினர் முத்துமுருகன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தலைமை ஆசிரியை செள.செல்வி வரவேற்றார். ஆசிரியை சாந்தினி நன்றி கூறினார்.
தைலாபுரம் பள்ளியில்...
தேசிய திறனாய்வுத் தேர்வில் தைலாபுரம் ஆர்.சி. பள்ளி மாணவிகள் இருவர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழித்திறனாய்வுத் தேர்வில் சாத்தான்குளம் ஒன்றியம் தைலாபுரம் ஆர்.சி.நடுநிலைப் பள்ளி மாணவிகள் பிரபா, ஜெயராணி ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இம் மாணவிகளை பள்ளித்தாளாளர் ராபின்ஸ்டான்லி, தலைமை ஆசிரியை அந்தோனிஜெயமேரி மற்றும் ஆசிரியர்கள் ஜான்மனோகரன், இருதயகனிசூசை ஆரோக்கியம், அந்தோனிபிரேமா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், முன்னாள் மாணவர்கள் பாராட்டினர்.