தேய்பிறை அஷ்டமி வழிபாடு
By DIN | Published On : 27th April 2019 08:03 AM | Last Updated : 27th April 2019 08:03 AM | அ+அ அ- |

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அருள்மிகு பைரவருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. சஹஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அருள்மிகு பைரவரை வழிபட்டனர்.