பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால பயிற்சி முகாம்
By DIN | Published On : 27th April 2019 07:59 AM | Last Updated : 27th April 2019 07:59 AM | அ+அ அ- |

தூத்துக்குடி தெற்கு வீரபாண்டிபுரம் பள்ளி குழந்தைகளுக்கான கோடைக்கால சிறப்பு முகாம் நடைபெற்றது.
தெற்கு வீரபாண்டிபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவர், மாணவிகள் தங்களது கோடை காலத்தை பயனுள்ளதாக மாற்றிடும் வகையில் கோடை கால சிறப்பு முகாம் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் ஆலையின் தாமிரா குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்றது. இதில், 22 மாணவர்கள், 38 மாணவிகள் என 60 பேர் கலந்து கொண்டனர்.
முகாமில், ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி, ஓவியம் வரைதல் மற்றும் அறிவியல் தொடர்பான பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு புத்தகப் பை, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. முகாமில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன துணைத்தலைவர்கள் தனவேல், திவாகரன், முருகேஸ்வரன், பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.