வாதலக்கரை அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டப்படுமா?

விளாத்திகுளம் அருகேயுள்ள வாதலக்கரை  முத்துசாமி இந்து தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளாத்திகுளம் அருகேயுள்ள வாதலக்கரை  முத்துசாமி இந்து தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 விளாத்திகுளம் பகுதியில் 1894இல் ச. முத்துசாமி பிள்ளை என்பவர் திண்ணை பள்ளியாக 4 மாணவர்களுடன் இப்பள்ளியைத் தொடங்கினார். 125 ஆண்டுகளாக அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியாக இயங்கி வரும் இப்பள்ளியில், தற்போது சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த  33 மாணவ- மாணவியர் படிக்கின்றனர். 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 
125ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் இந்தத் தருணத்தில் பள்ளியை மறு சீரமைப்பு செய்து,   கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், அடிப்படை வசதிகளை  செய்து தர வேண்டுமென   மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுகுறித்து பள்ளி நிர்வாகி எம்.எஸ். சேகர் கூறியது: வாதலக்கரை கிராமத்தைச் சுற்றி 3 கி.மீ. தொலைவுக்கு எந்த அரசுப் பள்ளியும் இல்லாத நிலையில், ஆரம்ப கல்விக்காக மாணவ- மாணவிகளை இங்கு சேர்ப்பதற்கு பெற்றோர் வருகின்றனர். ஆனால், போதிய வகுப்பறை கட்டடம் இல்லாததால் தனியார் பள்ளிகளை நாடிச் செல்கின்றனர்.  எனவே, இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்களை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.
 தலைமையாசிரியர் கவிதா கூறியது: பள்ளிக்குத் தேவையான கணினி, பிரிண்டர், பாடத்திட்டம் தொடர்பான கல்வி உபகரணங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஆகியவற்றுக்காக உதவிகளை எதிர்பார்க்கிறோம்.  கூடுதல் வகுப்பறைகளும், சுகாதார வளாகமும் அரசு ஏற்படுத்தி தர  வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com