முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
கொம்பன்குளத்தில் புதிய கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்
By DIN | Published On : 04th August 2019 12:52 AM | Last Updated : 04th August 2019 12:52 AM | அ+அ அ- |

கொம்பன்குளத்தில் இருந்து இலுப்பைகுளம் வரை புதிய வரத்துக் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
கொம்பன்குளத்தை தூர்வாரி குடிமராமத்து பணி மேற்கொள்ள முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தில் ரூ. 27 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தில் கொம்பன்குளத்தில் இலுப்பை குளம் வரை சுமார் 2 கி.மீ. தொலைவில் புதிய வரத்து கால்வாய் அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, சாத்தான்குளம் மண்டலத் துணை வட்டாட்சியர் சுவாமிநாதன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். இதில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ், சார் வட்ட ஆய்வாளர் பிரபாகர், கிராம நிர்வாக அலுவலர் வள்ளித்தங்கம், விவசாய சங்கத் தலைவர்கள் பேச்சிமுத்து, இலுப்பைகுளம் சூசைமணி, கொம்பன்குளம் செந்தில்குமரன், நெடுங்குளம் முரசொலிமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.