முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தூத்துக்குடி கல்லூரியில் ராகிங் சட்ட விழிப்புணர்வு முகாம்
By DIN | Published On : 04th August 2019 12:52 AM | Last Updated : 04th August 2019 12:52 AM | அ+அ அ- |

தூத்துக்குடி வ.உ.சி. அரசுப் பொறியியல் கல்லூரியில் கேலி வதை தடுப்புச் சட்டம்' என அழைக்கப்படும் ராகிங் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை நீதிபதி எம். சுரேஷ் விஸ்வநாத் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். அவர் பேசும்போது, ராகிங் என்பது மேற்கத்திய நாடுகளில் கலாசாரமாக உள்ளது. ஆசிய கண்டத்தில் அது குற்றமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு விஷயமும் நாம் அணுகும் முறையில்தான் உள்ளது. எனவே, புதிதாக சேரும் மாணவர்- மாணவிகளுக்கு மூத்த மாணவர்கள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, ராகிங் சட்டங்கள் குறித்து தலைமை குற்றவியல் நடுவர் எஸ். ஹேமா விளக்கினார். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான சாமுவேல் பெஞ்சமின், கல்லூரிப் பேராசிரியை மதுமதி, 600 மாணவர்- மாணவிகள் பங்கேற்றனர்.