முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயிலில் ரூ. 4 கோடியில் கல் மண்டபம் அமைக்கும் பணி தொடக்கம்
By DIN | Published On : 04th August 2019 12:56 AM | Last Updated : 04th August 2019 12:56 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயிலில் ரூ. 4 கோடியில் கல் மண்டபம் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயிலில் ரூ. 4 கோடியில் கல்மண்டபம் அமைக்கப்பட உள்ளது. 63 தூண்களுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள கல் மண்டபத்துக்கான திருப்பணிகள் தொடக்க விழா சனிக்கிழமை கோயில் வளாகத்தில் நடைபெற்றது. விழாவையொட்டி, சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஈசான மூலையில் அஸ்திவார பூஜையும், 7.30 மணிக்கு கல் தூண் காட்சிப்படுத்துதல், பஞ்சபூத பூஜையும் நடைபெற்றது. பூஜைகளை கோயிலின் பிரதான பட்டர்கள் வைகுண்டராமன், பாலாஜி ஆகியோர் செய்தனர். தொடர்ந்து, கோயில் வளாகத்தில் தகவல் மையம் திறக்கப்பட்டது.
திருப்பணிகள் தொடக்க விழா நிகழ்ச்சியில், தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் ஹேமா பத்மகுமார், கோயில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், சென்னை ஸ்தபதி சந்தானகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்ட பதி பெருமாள் திருப்பணி கைங்கர்ய அறக்கட்டளை செயலர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் இளங்குமரன், துணைத் தலைவர் முத்துராஜ், துணைச் செயலர் பாலசுப்பிரமணியன், வழக்குரைஞர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள் ஆறுமுகம், பாஸ்கர், விவேகம் ரமேஷ், ஜோதிமணி, இரா. அமிர்தகணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.