முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆக.6 முதல் இலவச செய்முறை பயிற்சி
By DIN | Published On : 04th August 2019 12:54 AM | Last Updated : 04th August 2019 12:54 AM | அ+அ அ- |

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆக. 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இலவசமாக செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொ) சாந்தி மகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை: கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரியில் மின்னணுவியல் துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவர், மாணவிகளுக்கு இயற்பியல் பாடப்பிரிவு குறித்த செய்முறை பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
இயற்பியலை ஒரு பாடமாக படிக்கும் பள்ளி மாணவர், மாணவிகள் இப்பயிற்சியில் தாங்கள் படிக்கும் பள்ளியின் முதல்வர் அல்லது தலைமையாசிரியர் அனுமதியுடன் கலந்துகொள்ளலாம். இப்பயிற்சி ஆக. 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும்.
இப்பயிற்சிக்கான முன்பதிவுக்கு 86374-31705 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.