முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
By DIN | Published On : 04th August 2019 12:50 AM | Last Updated : 04th August 2019 12:50 AM | அ+அ அ- |

மாவடிப்பண்ணை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவர்கள் சீனிவாசன், ஸ்டெல்லாமேரி, அஜீஸ், விஜய், விக்னேஷ், சுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட குழுவினர் மாற்றுத்திறன் குழந்தைகளை பரிசோதித்தனர். முகாமில் 30 பேருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாளஅட்டை, 53 பேருக்கு பேருந்து பயண சலுகை அட்டை வழங்கப்பட்டது. இதில், ஏரல் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் முத்துராமலிங்கம், மாவட்டபுள்ளியியல் அலுவலர் சுடலைமணி, வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், ஆசிரிய பயிற்றுநர்கள் ராஜன், ஜெயமேரி, ஆனந்தி, சகுந்தலா, ரமா உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட ஒருங்கினைப்பாளர் ராஜசெல்வி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜோதிமணி ஆகியோர் செய்திருந்தனர்.