முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
மெஞ்ஞானபுரம் கல்லூரியில் குடும்ப நல கருத்தரங்கம்
By DIN | Published On : 04th August 2019 12:51 AM | Last Updated : 04th August 2019 12:51 AM | அ+அ அ- |

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி , வட்டார அளவிலான குடும்ப நல கருத்தரங்கம் மெஞ்ஞானபுரம் ஜாண்தாமஸ் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் சு.அனிபிரிமின் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜெபசெல்வி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மருத்துவ ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்பநலத் துறை துணை இயக்குநர் ம. பரிதாஷரின் பங்கேற்று பேசினார்.
மக்கள் தொகை பெருக்கம் குறித்து நடைபெற்ற பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாவட்ட விரிவாக்க கல்வியாளர்கள் மோகனரெங்கன், செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர்கள் சேதுபதி,சித்திக்ஹசன், சமுதாய நல செவிலியர் லில்லிபாக்கியவதி மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள்ராஜ் வரவேற்றார். தீபக்ராம் நன்றி கூறினார்.