Enable Javscript for better performance
திருச்செந்தூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

    By DIN  |   Published on : 05th August 2019 08:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஆக.  6) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எம். சகர்பான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    தூத்துக்குடி மின்பகிர்மான வட்டத்தில் மாதந்தோறும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான குறைதீர் கூட்டம் திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக. 6) முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.
    தூத்துக்குடி நகர மின்விநியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஆக. 13 ஆம் தேதி, கோவில்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஆக. 20 ஆம் தேதி, தூத்துக்குடி ஊரக மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஆக. 27 ஆம் தேதியும் இக் குறைதீர் கூட்டங்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai