Enable Javscript for better performance
திருச்செந்தூர் முருகன் கோயிலில்தங்கத் தேருக்கு தற்காலிக நிலையம் அமைக்கும் பணி- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத் தேருக்கு தற்காலிக நிலையம் அமைக்கும் பணி

    By DIN  |   Published on : 05th August 2019 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கத் தேரை நிறுத்துவதற்காக உபயதாரர் செலவில் தற்காலிக நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும், அங்கப்பிரதட்சணம் செய்தும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அதேபோல தங்கத் தேர் இழுத்தும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார்கள். 
    இத்திருக்கோயிலில் நாள்தோறும் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கத் தேரில் எழுந்தருளி கிரிவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கிரிவீதி வரும் தங்கத் தேரை பக்தர்கள் ரூ. 2500 கட்டணம் செலுத்தி குடும்பத்துடன் இழுக்கலாம். அந்தப் பக்தர்களுக்கு திருக்கோயில் சிறப்பு தரிசன அனுமதி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்படும்.
    கோயிலில் ஏற்கெனவே இருந்த தங்கத் தேர் நிறுத்துமிடம் சேதமடைந்து அதன் மேற்கூரைகள் அவ்வப்போது கீழே உடைந்து விழுகிறது. இதனால் இக்கட்டடத்தைச் சீரமைக்க திருக்கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 
    இதனால் தங்கத் தேர் நிறுத்துவதற்கு தற்காலிகமாக உபயதாரர் செல்வில் தகடுகளாலான மேற்கூரையுடன் கூடிய நிலையம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai