திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத் தேருக்கு தற்காலிக நிலையம் அமைக்கும் பணி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கத் தேரை நிறுத்துவதற்காக உபயதாரர் செலவில் தற்காலிக நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கத் தேரை நிறுத்துவதற்காக உபயதாரர் செலவில் தற்காலிக நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும், அங்கப்பிரதட்சணம் செய்தும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அதேபோல தங்கத் தேர் இழுத்தும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார்கள். 
இத்திருக்கோயிலில் நாள்தோறும் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கத் தேரில் எழுந்தருளி கிரிவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கிரிவீதி வரும் தங்கத் தேரை பக்தர்கள் ரூ. 2500 கட்டணம் செலுத்தி குடும்பத்துடன் இழுக்கலாம். அந்தப் பக்தர்களுக்கு திருக்கோயில் சிறப்பு தரிசன அனுமதி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்படும்.
கோயிலில் ஏற்கெனவே இருந்த தங்கத் தேர் நிறுத்துமிடம் சேதமடைந்து அதன் மேற்கூரைகள் அவ்வப்போது கீழே உடைந்து விழுகிறது. இதனால் இக்கட்டடத்தைச் சீரமைக்க திருக்கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 
இதனால் தங்கத் தேர் நிறுத்துவதற்கு தற்காலிகமாக உபயதாரர் செல்வில் தகடுகளாலான மேற்கூரையுடன் கூடிய நிலையம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com