Enable Javscript for better performance
நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

    By DIN  |   Published On : 07th August 2019 07:18 AM  |   Last Updated : 07th August 2019 07:18 AM  |  அ+அ அ-  |  

    கோவில்பட்டியில் பிரதான சாலையில் உள்ள நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி நீர்வரத்து ஓடை மீட்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை  கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
    நீர்வரத்து ஓடையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றும் வரை சாலை விரிவாக்கப் பணியை நிறுத்தி வைக்க வேண்டும். முறைகேடாக வாய்க்கால் தோண்டுவதை நிறுத்த வேண்டும். சாலையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் போர்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு மீட்புக் குழுத் தலைவர் சங்கரலிங்கம் தலைமையில், மீட்புக் குழுவினர் கண்களில் கருப்புத் துணியைக் கட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 
    பின்னர், கோட்டாட்சியர் விஜயாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.  தொடர்ந்து, கோட்டாட்சியர் விஜயா தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் ராஜு, வட்டாட்சியர் மணிகண்டன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சூரியகலா, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் மற்றும் மீட்புக் குழுத் தலைவர் சங்கரலிங்கம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
    கூட்டத்தில், வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்திய பின்பு சாலை விரிவாக்கப் பணி நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp