கோவில்பட்டியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி இருபெரும் விழா
By DIN | Published On : 07th August 2019 07:11 AM | Last Updated : 07th August 2019 07:11 AM | அ+அ அ- |

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோவில்பட்டி- கயத்தாறு வட்டாரக் கிளைகள் சார்பில் இயக்க நாள், பணி நிறைவு பாராட்டு என ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, அமைப்பின் கோவில்பட்டி வட்டாரத் தலைவர் குணசீலன் ராஜா தலைமை வகித்தார். பொருளாளர் கருப்பசாமி, கயத்தாறு வட்டாரத் தலைவர் புனித அந்தோணி, பொருளாளர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பவுல் ஆபிரகாம் அந்தோணிராஜ், செயலர் செல்வராஜ், பொருளாளர் பாப் ஹையஸ், மாநிலச் செயற்குழு உறுப்பின ர் ரவீந்திரராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் லால் பகதூர் கென்னடி, மகேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விழாவில், மாநிலப் பொதுச்செயலர் மயில் பங்கேற்றுப் பேசினார். இதில், ஆசிரியர்கள் ஆ.விநாயகசுந்தரி, சீ.லோகநாயகி, லி.ராஜேஸ்வரி, எஸ்.மேரி ஹெலன் நிர்மலா, சி.இந்திராதேவி, எம்.செண்பகம், ராஜேந்திரன், ரெங்கநாயகி ஆகியோரின் சேவையைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டாரச் செயலர் அ.சகாயராஜ் வரவேற்றார். வட்டாரச் செயலர் வெ.தங்கப்பாண்டியன் நன்றி கூறினார்.