கோவில்பட்டி பள்ளியில் நாணயக் கண்காட்சி
By DIN | Published On : 09th August 2019 07:17 AM | Last Updated : 09th August 2019 07:17 AM | அ+அ அ- |

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் நாணயக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைவர் எவரெஸ்ட் எம். ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் அய்யனார் கண்காட்சியைத் திறந்துவைத்து, பார்வையிட்டார். கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் மாரியப்பன் கெளரவ விருந்தினராகக் கலந்துகொண்டார். பள்ளிச் செயலர் ரதிமுனிஸ்ரீ, பள்ளி நிர்வாக அதிகாரி சுசிலாதேவி, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் திருவளர்செல்வி, பள்ளித் தலைமையாசிரியை சாந்தினி, முதுகலை ஆசிரியை சித்ரா, பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்காட்சியில், தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவை நினைவுபடுத்தும் விதமான நாணயங்கள், இந்திய தலைவர்களின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள், சேர, சோழ, பாண்டியர் கால நாணயங்கள், சரித்திர கால நாணயங்கள், ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட பல்வேறு தலைவர்களின் உருவமுள்ள நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு நாணயங்கள் இடம்பெற்றன. கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, நாணய சேகரிப்பு முறை குறித்துப் பேசினார். தொடர்ந்து, நாணயங்கள் தயாரிப்பு முறை குறித்த காணொலிக் காட்சி திரையிடப்பட்டது.