திருமறையூர் மறுரூப ஆலய பிரதிஷ்டை
By DIN | Published On : 09th August 2019 07:13 AM | Last Updated : 09th August 2019 07:13 AM | அ+அ அ- |

நாசரேத் அருகேயுள்ள திருமறையூர் மறுரூப ஆலய பிரதிஷ்டை விழா 6 நாள்கள் நடைபெற்றது.
முதல் 2 நாள்கள் இரவு 7 மணிக்கு நற்செய்திக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில், சென்னை டேவிட் பாக்கியராஜ் தேவசெய்தி வழங்கினார். 3ஆவது நாள் காலை திருவிருந்து ஆராதனை உதவி குரு இஸ்ரவேல் ஞான்ராஜ் தலைமையில் நடைபெற்றது. பிற்பகலில் சபை மக்கள் சார்பில் விளையாட்டுப் போட்டி, இரவில் பாளையங்கோட்டை குருவானவர் ஜீவராஜ் குழுவினரின் பஜனை பிரசங்கம் நடைபெற்றது. 4ஆவது நாள் இரவு, காயல்பட்டினம் சேகரத் தலைவர் ஞானசிங் எட்வின் தலைமையில் பண்டிகை ஆயத்த ஆராதனை நடைபெற்றது. ஆலயப் பாடகர் குழுவினரின் சிறப்புப் பாடல்கள் இடம் பெற்றன. 5ஆவது நாள் அதிகாலை, பண்டிகையை முன்னிட்டு திருவிருந்து ஆராதனை சேகரத் தலைவர் எட்வின் ஜெபராஜ் தலைமையில் நடைபெற்றது. மாலையில் அசன விருந்து பரிமாறப்பட்டது. அசன விருந்தை நாசரேத் சேகர உதவி குருவானவர் இஸ்ரவேல் ஞான்ராஜ், டீக்கன் ஜெபசிங் ஆகியோர் முன்னிலையில் சேகரத் தலைவர் தொடங்கிவைத்தார். இதில், நாசரேத் சுற்றுவட்டார மக்கள் பங்கேற்றனர். 6ஆவது நாள் இரவு 7 மணிக்கு சபையாரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை சேகரகுருவானவர்கள் எட்வின் ஜெபராஜ், இஸ்ரவேல் ஞான்ராஜ், ரெனால்டு, சபை ஊழியர் ஸ்டான்லி ஜாண்சன் துரை, அசன கமிட்டி நிர்வாகிகள் , செயற்குழு உறுப்பினர்கள், சபை மக்கள் செய்திருந்தனர்.