சுடச்சுட

  

  ஆக. 17இல் காயல்பட்டினத்தில் வேலைவாய்ப்பு முகாம்: கனிமொழி எம்.பி. பங்கேற்பு

  By DIN  |   Published on : 15th August 2019 06:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காயல்பட்டினத்தில் வருகிற 17ஆம் தேதி நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாம் மற்றும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு தடகளப் போட்டி பரிசளிப்பு விழா ஆகியவற்றில் கனிமொழி எம்.பி. பங்கேற்கிறார்.
  இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை:
  காயல்பட்டினம் முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில், முஹியத்தீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கே.எஸ்.சி. மைதானத்தில், வருகிற 17ஆம் தேதி காலை 9 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்துகொள்கிறார்.
  மேலும், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டுச் சங்கம் சார்பில் சுதந்திர தின விளையாட்டுப் போட்டிகள் மற்றும் போதை ஒழிப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு தடகளப் போட்டிகள் வியாழக்கிழமை (ஆக. 15) தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
  இதற்கான பரிசளிப்பு விழா மற்றும் ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டு நிகழ்ச்சி, 18ஆம் தேதி மாலை 4 மணிக்கு காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியிலும் கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai