சுடச்சுட

  

  தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றானில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.
  கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா வரவேற்றார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சண்முகசுந்தரம், மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் முத்துலட்சுமி, கால்நடைத்துறை இணை இயக்குநர் சத்தியநாராயணன், வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி உள்ளிட்டோர் பேசினர்.
  முன்னோடி மனுநீதிநாளில் பெறப்பட்ட 185 மனுக்களில் 78 மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டு, அவற்றுக்கான பதில் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
  முகாமில், பயிற்சி ஆட்சியர் சுப்புலட்சுமி, வட்டாட்சியர் ரகு, சிவகாமி சுந்தரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜன், வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai