சுடச்சுட

  

  கோவில்பட்டி அருகே புதன்கிழமை நேரிட்ட விபத்தில் தொழிலாளி இறந்தார்.
  தூத்துக்குடி குலசேகரநல்லூர், தெற்கு ஆரைக்குளம் தெற்குத் தெருவைச் சேர்ந்த வெங்கடசுவாமி மகன் பால்ராஜ் (54).  கூலித் தொழிலாளியான இவர், புதன்கிழமை  பசுவந்தனை சாலையில் கோவில்பட்டியையடுத்த செண்பகப்பேரி விலக்கு அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இந்த பைக்கும், கோவில்பட்டியிலிருந்து காமநாயக்கன்பட்டிக்கு சென்ற வேனும் மோதினவாம். இதில், பால்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். நாலாட்டின்புத்தூர் போலீஸார் சென்று சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநரான சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த அ. யுவராஜா (23) என்பவரைக் கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai