சுடச்சுட

  

  கோவில்பட்டியில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறப்பு விளையாட்டு விடுதியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார். 
  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில், ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானம் அருகே கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி கட்டப்பட்டது.  இந்நிலையில், இந்த கட்டடத்தை திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். 
  இதையொட்டி கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் டி.வி.பேட்ரிக் கலந்துகொண்டு, விளையாட்டு வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.  நிகழ்ச்சியில், ஹாக்கி பயிற்சியாளர் முத்துகுமார், விடுதி காப்பாளர் உதயராஜா, கூடைப்பந்து பயிற்சியாளர் ஜெயரத்தினராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai