சுடச்சுட

  

  சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீமுத்துமாரியம்மன்  கோயில் கொடை விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு சப்பர பவனி நடைபெற்றது. 
  இக்கோயில் கொடைவிழாவை முன்னிட்டு, முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு உவரி  அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி கோயில், ஸ்ரீஅழகம்மன் கோயில்களிலி இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. பின்னர் 9 மணிக்கு விநாயகர், முருகன், பெருமாள்,  அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது.   நண்பகல் 12 மணிக்கு அலங்கார பூஜையும், இரவு திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. 
  2ஆம் நாளான திங்கள்கிழமை நண்பகல்  விநாயகர், முருகன், பெருமாள், மற்றும் அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜையும், இரவு 7 மணிக்கு அம்மன் கும்பம் வீதி உலாவும்,  8 மணிக்கு மஞ்சள்  பெட்டி ஊர்லமும் நடைபெற்றது. 
  3ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு யானை முன் செல்ல ஸ்ரீஅழகம்மன் கோயிலில் இருந்து பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. நண்பகல் அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு  8 மணிக்கு பக்தர்களின் முளைப்பாரி ஊர்வலமும்,  இரவு 12 மணிக்கு ஸ்ரீமுத்துமாரியம்மன்  பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலாவும் நடைபெற்றது.  4ஆம் நாளான புதன்கிழமை காலை 10 மணிக்கு கோலப்போட்டியும்,  நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும்,  இரவு 7மணிக்கு மாவிளக்கு பூஜையும்,  8 மணிக்கு அம்மன் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமும்,  9 மணிக்கு அம்மனுக்கு அலங்கார பூஜையும்,  நள்ளிரவு அம்மனுக்கு படைப்பு பூஜையும் நடைபெற்றது.  விழா ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai