பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்க அழைப்பு

தூத்துக்குடியில் திமுக சார்பில் சனிக்கிழமை (ஆக. 17)  நடைபெறும் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் 

தூத்துக்குடியில் திமுக சார்பில் சனிக்கிழமை (ஆக. 17)  நடைபெறும் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் மாணவர், மாணவிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:
அண்ணாவின் 111 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு,  முரசொலி அறக்கட்டளை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர், மாணவிகளுக்கான புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டிகள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆக.17 ஆம் தேதி காலை 9 மணிக்கு தூத்துக்குடி போல்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. 
நிகழ்ச்சிக்கு மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமை வகிக்கிறார்.
பள்ளி மாணவர், மாணவிகள் புரட்சி கவிஞர் பாரதிதாசன் கவிதைகளில் "தமிழ்" எனும் தொகுப்பில் "தமிழ் வளர்ச்சி" எனும் தலைப்பில் "எளிய நடையில் தமிழ்நூல்" எனத் தொடங்கி "தகத்த காயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்!" என்பது வரை (16 வரிகள்) ஒப்பிக்கலாம். அல்லது புரட்சி கவிஞர் பாரதிதாசன் கவிதைகளில் "தமிழ்" எனும் தொகுப்பில் "சங்கநாதம்" எனும் தலைப்பில் "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்" எனத் தொடங்கி தமிழ் எங்கள் மூச்சாம்!" என்பது வரை (20 வரிகள்) ஒப்பிக்கலாம்.
 கல்லூரி மாணவர், மாணவிகள் புரட்சி கவிஞர் பாரதிதாசன் கவிதைகளில் "தமிழ்" எனும் தொகுப்பில் "எந்நாளோ" எனும் தலைப்பில் "என்னருந் தமிழ்நாட்டின் கண்" என தொடங்கி "சொக்கும் நாள் எந்த நாளோ?  என்பது வரையிலும் (24 வரிகள்) அல்லது  புரட்சி கவிஞர் பாரதிதாசன் கவிதைகளில் "திராவிட நாடு" தொகுப்பில் "இனப் பெயர்" எனும் தலைப்பில் "இனப்பெயர் ஏன்' என்று பிறன் எனைக் கேட்டால் எனத் தொடங்கி மீட்டும் மீட்டும் இன்பம் விளைவதாம் என்பது வரையிலும் (22 வரிகள்) ஒப்பித்தல் வேண்டும்.
 மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக  இலக்கிய அணி அமைப்பாளர் இரா. மணியை 9367561381 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com