பரிவல்லிகோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பரிவல்லிகோட்டை ஊராட்சியில்  சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பரிவல்லிகோட்டை ஊராட்சியில்  சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவை உறுப்பினர் சண்முகையா முன்னிலை வகித்தார். 
கூட்டத்தில்,  மகளிர் திட்டம் மூலம் 6 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.35.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை  ஆட்சியர் வழங்கினார்.  பொதுமக்களுக்கு நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துணிப்பை,  சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 650  பேருக்கு மரக்கன்றுகளையும்  அவர் வழங்கினார்.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியது;  முதல்வரின் சிறப்பு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 88 பாசன குளங்களை தலா ரூ.5 லட்சம் மதிப்பிலும், 422 சிறு குளம் மற்றும் குட்டைகள் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலும் என சுமார் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.   பள்ளி மற்றும் அரசு கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு நிறுவும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தனியார் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஊராட்சி பகுதியில் மரம் நடும் பணிகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிவல்லிகோட்டை ஊராட்சி பகுதியில் 2 ஆயிரம் மரக்கன்றுகள்  மற்றும் மாவட்டம் முழுவதும் சுமார் 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன, என்றார் அவர்.    
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பரிவல்லிகோட்டை ஊராட்சியில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகளையும்,   ரூ.5 லட்சம் மதிப்பில் பரிவல்லிக்கோட்டை ஊராட்சி குளம் தூர்வாரும் பணியையும் ஆட்சியர் தொடங்கி வைத்தார். மேலும்  மதர் சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் மாவட்டம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகளை  நடும் பணிகளையும்  அவர் தொடங்கி வைத்தார். 
கூட்டத்தில், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் ரேவதி, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ரகு மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com