Enable Javscript for better performance
தூத்துக்குடியில் நாளை 8 மையங்களில் காவலர் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் 8 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 25) நடைபெறும் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் 9599 பேர் பங்கேற்கின்றனர்.
    இதுதொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  2019 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த 2 ஆம் நிலை காவலர் (ஆண் மற்றும் பெண்), சிறைக்காவலர்,  (ஆண் மற்றும் பெண்) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான (ஆண்) எழுத்துத்தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் 8 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 25) காலை 10 முதல் 1 மணி வரை நடைபெறுகிறது.
    அதன்படி, தூத்துக்குடி மில்லர்புரம் பிஎம்சி மெட்ரிக் பள்ளி, காமராஜ் கல்லூரி, காரப்பேட்டை நாடார் ஆண்கள் பள்ளி, மில்லர்பும் தூய மரியன்னை ஆண்கள் பள்ளி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் பள்ளி, வஉசி கல்லூரி, செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளி, தூய மரியன்னை கல்லூரி (பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும்) ஆகிய 8 மையங்களில் இத்தேர்வு நடைபெறும். 
    தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ள 9 ஆயிரத்து 599 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தேர்வு எழுது பவர்கள் அழைப்புக் கடிதத்தை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இணையத்தில் இருந்து நுழைவுசீட்டு எடுத்த நகலில் புகைப்படம் இல்லாத விண்ணப்பதாரர்  புகைப்படம் ஒட்டி அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரின் சான்றொப்பம் பெற்று தேர்வுக்கு வரும்போது எடுத்து வரவேண்டும்.
    தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் சரியாக காலை 9 மணிக்கு முன்பு தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும். எக்காரணத்தை கொண்டும் காலதாமதமாக வருவோர் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப் படமாட்டாது. 
    விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்துக்குள் செல்லிடப்பேசி, கால்குலேட்டர் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. மேலும், தேர்வுக்கு வரும்பொழுது அழைப்புக் கடிதம், நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனை பேனா, தேர்வு அட்டை மற்றும் ஆள் அறியும் அடையாள அட்டை கொண்டு வரவேண்டும்.  தேர்வு அழைப்பு கடிதத்தில் உள்ள அறிவுரைகளை அறிந்து அவற்றை பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai