6 சோதனைச் சாவடிகள் அமைப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு

தமிழகத்திற்கு தீவிரவாதிகள் ஊடுருவிதாக வந்த எச்சரிக்கையை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் 6 இடங்களில்

தமிழகத்திற்கு தீவிரவாதிகள் ஊடுருவிதாக வந்த எச்சரிக்கையை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் 6 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக எஸ்.பி. அருண் பாலகோபாலன் தெரிவித்தார். 
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலன், கோயில் பாதுகாப்பு குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவிதாக வந்த உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 2 கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் வியாழக்கிழமை நள்ளிரவு 12 முதல் காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது, 112 விடுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
1100 வாகனங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், போதையில் வாகனம் ஒட்டியதாக 34 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. முன்னென்சரிக்கை நடவடிக்கையாக 35 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இம்மாவட்டத்தில் கடற்கரை பகுதிகள் இருப்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
இரவு, பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரையில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கூடுதலாக 300 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் இருந்து கடற்கரையில் ரோந்து செல்லும் பைக் வாகனம் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
பேட்டியின்போது, திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆ. பாரத், காவல் ஆய்வாளர் முத்துராமன், உதவி ஆய்வாளர்கள் சங்கர், பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com